கே.ஜி.கண்டிகை-குடிகுண்டா நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு
Update: 2024-01-02 10:41 GMT
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் இருந்து எஸ்.அக்ரஹாரம் காலனி மற்றும் கிராமம், குடிகுண்டா வழியாக ஜனகாபுரம், பரவத்துார் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் தார்ச்சாலை அமைத்துள்ளனர். இச்சாலை வழியாக ஒரு அரசு பேருந்து, மினி பேருந்து, லாரி, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், 24 மணி நேரமும் சென்றவாறு இருக்கும். இந்நிலையில், நெடுஞ்சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். மேலும், 20 அடி அகலம் இருந்த நெடுஞ்சாலை, 15 அடியாகி தற்போது சுருங்கி விட்டது. சாலை ஆக்கிரமித்துள்ளதால் அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து சென்று வருவதற்கு சிரமப்படுகிறது. நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படு கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.