எடப்பாடி பேருந்து நிலையத்தில் நிழற் குடைகள் ஆக்கிரமிப்பு பயணிகள் அவதி

எடப்பாடி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் பயணிகள் அவதியடைகின்றனர்.

Update: 2024-06-17 11:56 GMT

எடப்பாடி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் பயணிகள் அவதியடைகின்றனர்.


சேலம் மாவட்டம் எடப்பாடி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி ஒரு வருடங்களுக்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் ஆங்காங்கே பேருந்து நிலையம் வெளியில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு எடப்பாடி நகராட்சி நிர்வாகம் நிழற்க் குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழ்ற்க் குடையை பயணிகள் பயன்படுத்துவதை விட தினசரி கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடை, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பேருந்துக்காக வரும் பயணிகள் வெயிலில் நின்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பேருந்துக்காக வரும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை எடப்பாடி நகராட்சி நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Tags:    

Similar News