சாத்தூர் அருகே மூளை காய்ச்சலால் சிறுவன் பலி
of brain fever near Chatur The boy was killed
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி சித்ரா தம்பதியினர், பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் இளைய மகன் நிதிஷ்குமார் (10) மேட்டமலை அரசு தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நிதிஷ்குமாருக்கு கடந்த 4ம் தேதி காய்ச்சல் அடித்துள்ளது சாதாரணமான காய்ச்சலாக இருக்கும் என சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் சிறுவனின் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் மேட்டமலை கிராமத்தில் மூளை காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் மேட்டமலை கிராமத்தில் போதிய துப்புரவு பணிகளை ஊராட்சி நிர்வாகம் செய்யாததை சிறுவன் உயிர் இழப்புக்கு காரணம் என மேட்டமலை கிராம மக்கள் குற்றம்சாட்டினர்