திருப்பூரில் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு அதிகாரி கைது

திருப்பூரில் இலவச வீட்டு மனை பட்டாவுக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்க பத்தாயிரம் லஞ்சம் கேட்ட திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

Update: 2024-03-12 15:04 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது தாயாருக்கு வீரபாண்டி பகுதியில் தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அங்கு அவர் வீடு கட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த இடத்தை தனது மகன் அசோக் குமார் பெயருக்கு தான கிரையும் செய்து வைக்க முடிவு செய்து இலவச வீட்டு மனை பட்டாவிற்கு தடையின்மை சான்று கேட்டு திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் இடம் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் தடை இன்மை சான்று வழங்க பத்தாயிரம் கொடுக்க வேண்டும் என நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன் கேட்டுள்ளார். பணம் தர விட்டால் தடையின்னமை சான்று வழங்க முடியாத எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்ததையடுத்து 8000 ரூபாய் வேண்டும் என அவரது உதவியாளர் சுரேஷ் கூறியுள்ளார். இது தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அசோக்குமார் புகார் அளித்தார். அவரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.

அசோக்குமார் அந்த நோட்டுகளை இன்று திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் நாகராஜனிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தடை இன்மை சான்று வழங்குவதற்கு லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சுரேஷ்குமாரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News