மலை கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு நடத்திய அதிகாரிகள்....
தச்சமலை மலைவாழ் கிராமத்தில் மணல் சிற்பம் அமைத்து அதிகாரிகள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக திருவட்டாரை அடுத்த பேச்சிப்பாறை ஊராட்சிக்குஉட்பட்ட தச்சமலையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடத் தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மணல் சிற்பம் மற்றும் செல்பி பாயிண்ட் அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, சையது உசேன், பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், தச்சமலை அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியின்போது அனைவரும் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.