சாலை நடுவே வரைபடமிட்டு ஆய்வு!
செங்கம், போளூர் மற்றும் குப்பநத்தம் சந்திப்பில் அமைய உள்ள ரவுண்டானாவிற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை நடுவே வரைபடமிட்டு ஆய்வு செய்தனர்.
Update: 2024-04-24 15:03 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், போளூர் மற்றும் குப்பநத்தம் சந்திப்பில் அமைய உள்ள ரவுண்டானா வாகனம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாரு அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் சாலை நடுவே வரைபடமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.