ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
பழனி மலை அடிவாரத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றும் பணி தீவிரம் நடைபெறுகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 07:25 GMT
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
பழனிக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இவர்கள் கிரி விதியில் நடமாட முடியாமல் திணறும் நிலைக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை வைத்த போதும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றமே தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் போதும் ,பலமுறை வியாபாரிகள் போராட்டம் மற்றும் கடையடைப்பு நடத்திய போதும் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் மாற்றம் இல்லாத நிலை தொடர்ந்தும் நீடித்தது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பதட்டம் நிலகியது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.