ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு.
விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ்களில் உரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறதா எனவும், வரிகள் செலுத்தப்பட்டுள்ளதா எனவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Update: 2024-01-14 05:10 GMT
பொங்கல் பண்டிகை என்பதால், ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிப்பு மற்றும் பஸ் குறித்தும் ஆய்வு செய்ய மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் உத்தர விட்டார். இதையடுத்து, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விழுப்புரம் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் உரிய கட்டணம் இன்றி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?, பஸ்சுக்கான வரிகள் முறையாக கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில், நேற்று முன்தினம் இரவு 100 ஆம்னி பஸ்களை ஆய்வு செய்து 30 பஸ்களுக்கு சோதனை அறிக்கைகளை வழங்கியும், போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் 32 ஆயிரத்து 500 ரூபாயை அபராதமாகவும் வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.