தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் : அலுவலர்கள் ஆய்வு 

கல்லணை கால்வாயில் கழிவுநீர் செல்வதால் மீன்கள் இறந்து மிதப்பதை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயை ஆய்வு செய்தனர்.

Update: 2024-02-19 01:50 GMT
மீன்கள் செத்து மிதந்த சம்பவம்

கல்லணைக் கால்வாயில், தஞ்சை மாநகராட்சி பகுதியில், கால்வாயை கடந்து செல்லும் கழிவுநீர் வடிகால் சைபன் அமைப்பு சேதமடைந்து, கழிவுநீர் கால்வாயில் கலப்பதாலும், இதனால், கால்வாயில் மீன்கள் இறந்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாகவும் வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி, ஞாயிற்றுக்கிழமை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயை ஆய்வு செய்தனர்.

கால்வாயில் இருந்து இறந்த மீன்களும் மற்றும் குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் கால்வாய் தண்ணீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், கால்வாயைக் கடந்து செல்லும் மாநகராட்சியின் கழிவுநீர் வடிகால் அமைப்பை விரைவாக சரி செய்யுமாறும் இனிவரும் காலங்களில் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கலக்காமல் தடுக்குமாறும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சாவூர் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் எம். பவளகண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News