கோக்கலை கல்குவாரி அருகில் அதிகாரிகள் அளவீடு

கோக்கலை கல்குவாரி அருகில், மக்கள் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்தனர்.

Update: 2024-01-07 10:22 GMT

அளவீடு செய்ய அதிகாரிகள்

எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமக்கல் 5கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், சுற்றுசூழல் பாதிப்பு, காற்றுமாசுபாடு, குடியிருப்புகள் சேதாரம், கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர்.

எனவே, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இக்கல்குமவாரிகளை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் என பல்வேறுகட்ட போராட்டங்களை இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் நடத்தி வந்தனர்.

பலமுறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மேலும், கல்குவாரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் இடையிலான தூரஇடைவெளி குறித்தான அளவீடு செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனடிப்படையில் நேற்று, கோக்கலை கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரிகள் அருகில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்தனர்.

சட்டம், ஒழுங்கு பாதிக்ககூடாதென எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில், கல்குவாரிகள் அருகில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News