தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
சேலத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வெள்ளிப்பட்டறை, நகைக்கடைகளில் ஆய்வு.
By : King 24x7 Angel
Update: 2024-02-01 05:53 GMT
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் அதிகாரிகள் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் சட்டத்தின் கீழ் சேலம் செவ்வாய்பேட்டை, கந்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெள்ளிப்பட்டறை, நகைக்கடைகள், பாத்திர கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. மேலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும். மீறினால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது 6 மாத சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி எச்சரித்துள்ளார்.