காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

அரசு நிதியுதவி பள்ளிகளில் செய்யாறு கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயகாந்தம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-14 06:04 GMT

அதிகாரிகள் ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த அரியபாடி, மோட்சவாடி, நெடுங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு நிதியுதவி பள்ளிகளில் செய்யாறு கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயகாந்தம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காலை உணவு திட்டம் செயல்படுத்த வேண்டி பொருட்கள் வைப்பறை, சமையலறை, மாணவர்களுக்கு சுத்தமான முறையில் உணவுகள் வழங்கப்படுகின்றதா உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களிடம் உணவு குறித்து கேட்டறிந்தனர்.
Tags:    

Similar News