அதிரடி காட்டிய அதிகாரிகள்: பட்டாசு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி

Update: 2023-10-21 16:16 GMT

ஆலோசனை கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களுக்குபட்ட பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் பெற்றவர்கள், வெடிமருந்து வைத்திருப்பவர்கள், தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் கோரியவர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது.

தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அரசின் நிபந்தனைகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும் மேலும் அவர் அரசின் அறிவிப்பில் கூறியுள்ளவாறு ஏற்பாடுகள் செய்யாதவர்களுக்கு சங்ககிரி, இடங்கணசாலை, எடப்பாடி ஆகிய பகுதிகளில் பொதுவாக ஒரு இடத்தில் விற்பனை செய்ய கடைகள் ஒதுக்கி தர ஆலோசித்து வரப்படுகின்றன எனவும் கூறினார்.

இதில் சங்ககிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, சங்ககிரி தீயணைப்பு நிலை அலுவலர் டஅருள்மணி, உள்ளிட்ட பல்வேறு காவல்துறை, அரசு அலுவலர்கள், நிரந்தர வெடிமருந்து உரிமம் பெற்றவர்கள், தற்காலிக பட்டாசுகள் விற்பதற்கு உரிமம் கோரி விண்ணப்பித்தவர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News