குமரியில் 10 ஓட்டுக்காக 175 கிலோ மீட்டர் பயணம் செய்த அதிகாரிகள்

குமரியில் 10 ஓட்டுக்காக 175 கிலோ மீட்டர் அதிகாரிகள் பயணம் செய்தனர்.

Update: 2024-04-19 10:37 GMT

குமரியில் 10 ஓட்டுக்காக 175 கிலோ மீட்டர் அதிகாரிகள் பயணம் செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பறை ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டுக்குட்பட்ட அப்பர் போதையார் பகுதியில் அங்கு மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆறு ஆண்கள் நான்கு பெண்கள் என மொத்தம் பத்து வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாக்காளர்களுக்காக அப்பர் போதையார் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.    

 இந்தப் பகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்காளர் பதிவுக்கான மண்டல அலுவலர், வாக்குப்பதிவு நடத்துனர், உதவியாளர் ஐந்து பேர், துப்பாக்கி ஏந்திய போலீசார் மூன்று பேர்  மொத்தம் பத்து பேர் இரண்டு வாகனங்களில் அப்பர் போதையார் பகுதி புறப்பட்டனர்.        இந்த அப்பர் போதையாறு மலைப்பகுதிக்கு பேச்சிப்பாறை வழியாக சாலை மார்க்கமாக செல்ல முடியாது.

எனவே அதிகாரிகள் நேற்று முன்தினம்  பகல் 12 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன திருவட்டாறு தாலுகா அலுவலகத்தில் இருந்து நாகர்கோவில், பணகுடி, களக்காடு, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக 175 கிலோ மீட்டர் பயணித்து அப்பர் கோதையாறு பகுதிக்கு சென்றனர். பத்து வாக்காளர்களின் ஓட்டுரிமைக்காக அதிகாரிகள், ஊழியர்கள் என 10 பேர் 175 கிலோமீட்டர் பயணம் செய்து சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News