ஆலங்குளத்தில் முதியவா் தற்கொலை: போலீஸுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்ய முயற்சி
முதியவா் தற்கொலை: போலீஸுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்ய முயற்சி;
Update: 2024-07-04 08:30 GMT
தற்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வடக்குக் கரும்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்புக்குட்டி(85). உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்காமல், அவரது உடலை தகனம் செய்வதற்கு உறவினா்கள் ஏற்பாடு செய்தனராம். அவ்வழியே ரோந்து சென்ற போலீஸாா் இதை அறிந்து ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.