சேலத்தில் முதியவர் தற்கொலை

சேலத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-23 12:25 GMT

தற்கொலை

சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 72). இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சல், விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று எலி பேஸ்டை கூல்டிரிங்சில் கலந்து அருந்தி உள்ளார்.

இதன் பின்னர் வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தானம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News