முதியவர் தற்கொலை
திருப்பூர், பெருமாநல்லூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-26 16:08 GMT
தறகொ
பெருமாநல்லூர் அருகே உள்ள குருவாயூரப்பன் நகர் காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா(வயது 45).அதே பகுதியில் சந்தியாவின் தந்தை சின்ன ராஜ்(75) தாய் பத்மாவதி (65) இவர்கள் மகன் ஆறுமுகம் (50) வீட்டில் வசித்து வருகின்றனர். சின்னராஜிற்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் சின்னராஜ் இருந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை சின்னராஜ் விஷம் குடித்துள்ளார்.
உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து பரிசோதித்த போது சின்னராஜ் ஏற்கனவே இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.