அச்சரப்பாக்கம் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.;
Update: 2024-02-16 08:32 GMT
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டாபி என்பவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார் அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் பட்டாபி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பட்டாபி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சுறுப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.