சேலத்தில் கார் மோதி முதியவர் சாவு
சேலம் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-13 13:56 GMT
சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் மாரியப்பன் (70). இவர் நேற்றிரவு 11மணியளவில் குமரகிரிப்பேட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.