ஏணியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் வீட்டின் ஓடுகளை சரி செய்ய ஏணியில் ஏறிய போது தவறி விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.;
Update: 2024-05-08 10:03 GMT
ஏணியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(70). இவர் தனது வீட்டின் ஓடுகளை சரிசெய்ய ஏணி மீது ஏறி உள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.