பைக் மோதி முதியவர் உயிரிழப்பு : போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே பைக் மோதி நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-20 05:53 GMT
உயிரிழந்த முனி கவுடு
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொங்கசெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனி கவுடு (68) இவருக்கு வாய் பேச இயலாது. இவருக்கு மனைவி மற்றும் 6 பிள்ளைகள் உள்ளனர். இவர் மேலூர் என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் நடந்து திரும்பி வரும்போது அதிவேகத்தில் அந்த பகுதியில் பைக்கில் சென்ற ஒருவர் முதியவர் மீது மோதி உள்ளார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முனி கவுடு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணையை கொண்டு வருகின்றனர்.