ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி முதியவர் பலி
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்..;
Update: 2024-06-01 05:04 GMT
காவல்துறை விசாரணை
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் பலியானார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான் கொண்டான் காலனி தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் பூராசாமி (70). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை தத்தனூரில் சர்வீஸ் சாலையிலிருந்து தேசியநெடுஞ்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார் அப்போது திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த கார் ஒன்று முதியவர் மீது மோதியதில் முதியவர் பூராசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த டாக்டர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.