ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்சி கொத்தமங்கலத்தில் ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு. போலீசார் விசாரணை;

Update: 2024-02-24 05:22 GMT
ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

முதியவா் உயிரிழப்பு

  • whatsapp icon
திருச்சி, ஸ்ரீரங்கம், கொத்தமங்கலம் சுப்பிரமணியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏகாம்பரம் (70). இவா், திங்கள்கிழமை காலை திருச்சி - பூங்குடி ரயில் நிலையத்துக்கு இடையே கொத்தமங்கலம் அருகே ரயில் தண்டவாள பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாா். அப்போது அவ்வழியே வந்த, நாகா்கோவில் வரை செல்லும் விரைவு ரயில் ஏகாம்பரம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News