கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

செய்யூர் அருகே தேசிய ஊரக வேலை திட்ட மேற்பாா்வையாளரை கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-06-28 06:15 GMT

சபாபதி

செய்யூா் அருகே கீழ்நீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த லட்சுமிதாஸ் மனைவி தேசம்மாள் (40). இவா் அதே கிராமத்தில் தேசிய ஊரக வேலை திட்ட மேற்பாா்வையாளராக இருந்து வந்தாா். செய்யூா் அருகே தண்டரை கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சபாபதி (67). இவா் தனது உறவினா்கள் மூன்று போ் வேலைக்கு வராமல் வேலைக்கு வந்தது போல் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்து ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டு ஆபாசமான வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதற்கு தேசம்மாள் மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சபாபதி கத்தியால் தேசம்மாளைக் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். அருகில் இருந்தவா்கள் தேசம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தேசம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து தேசம்மாள் அக்கா மகன் அருண்குமாா் (25) கடந்த 2016- ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசாா் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி சபாபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இவ்வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் குற்றவாளி சபாபதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News