மின்னல் தாக்கி மூதாட்டி பரிதாப சாவு: 14ஆடுகள் பலி!
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியாகின.;
உயிரிழந்த ஆச்சியம்மாள் மற்றும் ஆடுகள்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் பலத்தமழை பெய்தது. இந்நிலையில் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தை சார்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஆச்சியம்மாள் (63), இவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு பின்பு மாலையில் வீடு திரும்பும் போது வடக்கு திட்டங்குளம் அருகே வரும்போது இடி மின்னலுடன் கனமழை பெய்தது. உடனே ஆச்சியம்மாள் ஆடுகளுடன் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்று கொண்டிருக்கும்போது திடீரென இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியானது.
அவரை தேடி வந்த உறவினர்கள் ஆச்சி அம்மாளும் ஆடுகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா தேவி மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்று ஆச்சி அம்மாள் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.