மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி!
மின்சாரம் கம்பியை கவனிக்காத மூதாட்டி அதை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து பலியானார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 06:16 GMT
பலி
கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா இவருடைய மனைவி ஆனந்தவல்லி (80). இவர் அதேபகுதியில் பூக்கடை நடத்தி வந்தார்.சம்பவத்தன்று இவரது கடைக்கு அருகில் உள்ள அரளி செடியில் பூக்களை பறிப்பதற்காக மூதாட்டி ஆனந்தவல்லி சென்றுள்ளார். அப்போது அந்த செடியின் அருகே உள்ள தகரக் கொட்டகை மீது மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதனை கவனிக்காத மூதாட்டி அந்த கம்பியை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து பலியானார்.