உடல் நலம் பாதித்த மூதாட்டி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.
உடல் நலம் பாதித்த மூதாட்டி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 12:46 GMT
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
காவல்துறை விசாரணை
மருத்துவமனை
உடல் நலம் பாதித்த மூதாட்டி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை. கரூர் மாவட்டம் தென்னிலை, மீனாட்சி வலசு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மனைவி நல்லம்மாள் வயது 90. நல்லம்மாலுக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு நோய் வாய்ப்பட்டு இன்னலுக்கு ஆளாகி இருந்தார். இதனால் விரக்தி அடைந்த நல்லம்மாள் பிப்ரவரி 26 ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் டெட்டாலுடன் எறும்பு மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனை அறிந்து அவரது பேத்தி சசிகலா வயது 35 என்பவர் உடனடியாக நல்லம்மாளை மீட்டு கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லம்மாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சசிகலா காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த நல்லம்மாளின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.