சங்கரநாராயண சுவாமி கோவிலில் 11ஆம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம் நடக்கிறது.

Update: 2024-06-24 11:52 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வரும் 11ஆம் தேதி ஆடித்தபசு கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீசங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஜூலை 11-ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும் என்றும், ஜூலை 19ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் என்றும், ஜூலை 21ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு மேல் விழாவின் சிகர நிகழ்வான தவசுக்காட்சி நடைபெறும் என்றும் இரவு நேர தவசுக்காட்சி 11.45 மணிக்கு நடைபெறும் என்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திருவிழா திரு நாட்களில் சங்கீத கச்சேரிகளும், நாதஸ்வரமும், தேவாரப்பாராயணமும், சொற்பொழிவுகளும் நடைபெறும் என்றும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News