தீரன் சின்னமலை பிறந்த தினம் கொமதேக, திமுக சார்பில் மலர் தூவி மரியாதை
சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை பிறந்த தினத்தை முன்னிட்டு கொமதேக, திமுக சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268 வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவு மணி மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம். செல்வகணபதி ஆகியோர் தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக 200 இடங்களை தாண்டாது எனவும், இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என டி.எம்.செல்வகணபதி பேட்டி அளித்தார். சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் 268 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஈரோடு பிரிவு சாலை பகுதியிலுள்ள தீரன் சின்னமலை நினைவு மணி மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம். செல்வகணபதி ஆகியோர் தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.எம். செல்வகணபதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை தாண்டாது எனவும் இந்தியா கூட்டணி இம்முறை ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்றும் கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் சிஎஸ்டி வரியின் காரணமாக அனைத்து தொழில்களும் நழிவடைந்துள்ளதாகவும் குறிப்பாக விசைத்தறி தொழில் மற்றும் அதன் உபகரணங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம், புதுச்சேரி உட்பட இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் பேட்டியளித்தார். அப்போது திமுக மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரம், கொ ம தே க தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.