இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு,வித்தியாசமான முறையில் ஓவியம்

பழனியை சேர்ந்த ஓவியர் ஒருவர் இளையராஜா இசை அமைத்த தமிழ் திரைப்படங்களின் பெயர்களை வைத்தே இளையராஜாவின் ஓவியம் வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-01 11:55 GMT

இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு,பழனியை சேர்ந்த ஓவியர் ஒருவர் இளையராஜா இசை அமைத்த தமிழ் திரைப்படங்களின் பெயர்களை வைத்தே இளையராஜாவின் ஓவியம் வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் அன்புச்செல்வன். வருகிற ஜூன் 3ம் தேதி இளையராஜாவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு, இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படம் முதல் தற்போது இசையமைத்துள்ள தாரை தப்பட்டை திரைப்படம் வரையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் பெயர்களை வைத்தே இளையராஜாவின் உருவத்தை ஓவியமாக வரைந்து உள்ளார்.ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவியர் அன்பு செல்வனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News