நண்பர்கள் தாக்குதல் விவகாரத்தில் ஒருவர் கைது - 3 பேர் தலைமறைவு !

நண்பர்களுக்குள் தகராறு சமாதானம் பேசுவதாக கூறி பீர் பாட்டிலால் தாக்கிய 4- பேரில் 1-வர் கைது. மூன்று பேர் தலைமறைவு.;

Update: 2024-04-08 09:37 GMT

காவல்

நண்பர்களுக்குள் தகராறு சமாதானம் பேசுவதாக கூறி பீர் பாட்டிலால் தாக்கிய 4- பேரில் 1-வர் கைது. மூன்று பேர் தலைமறைவு.

கரூர், பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், 4-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சரவணன் வயது 39. இவரது நண்பர்கள் அருணாச்சல் நகரை சேர்ந்த சந்தோஷ் குமார், ஏவிபி நகரை சேர்ந்த ஜீவா, டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார், கே எம் பி காலனி சேர்ந்த மணிராஜ்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள்ளாக மது போதையில் இருந்த போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை சரி செய்வதற்காக, சமாதானம் பேச, சரவணனை அவரது நண்பர்கள் ஏப்ரல் 6-ம் தேதி இரவு 9 முக்கால் மணி அளவில், வடக்கு தெருவில் உள்ள சப்வே பகுதிக்கு செல்போனில் பேசி வரச் சொல்லி உள்ளனர்.

இதனை நம்பி சமாதானத்திற்கு பேச வந்த சரவணனை தகாத வார்த்தை பேசி, பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இதில் சரவணனுக்கு தலையில் பலத்த காயமும் மற்றும் உள் காயங்களும் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.

மற்ற சந்தோஷ் குமார், ஜீவா, மணிராஜ் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர். எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News