தனியார் நிறுவன பணம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
தனியார் நிறுவன பணம் கொள்ளை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்ததையடுத்து மேலும் வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 06:11 GMT
தனியார் நிறுவன பணம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் இயங்கி வரும் பிரபல காண்ட்ராக்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர் சதீஷ்குமார், உதவியாளர் கார்த்திக் ஆகியோர் நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கடந்த ஆறாம் தேதி ரூபாய் 82 லட்சத்தை சாக்கு முட்டையில் வைத்து காரில் எடுத்துச் சென்றனர். காரை நிறுவனத்தின் கார் டிரைவர் ராமன் வயது 25 ஓட்டினார். டீசல் நிரப்புவதற்காக காரை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ராமன் நிறுத்திய உடன் சதீஷ்குமார், கார்த்திக்கு இருவரும் கீழே இறங்கினர். அப்போது ராமன் பணமூட்டை இருந்த காருடன் தலைமறைவானார் இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து விசாரணை நடத்தி செண்பாட்டூரில் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75 லட்சத்தை மீட்டு ராமனுக்கு உடந்தையாக இருந்த புத்தம்புரை சேர்ந்த செல்வமணி வயது 20, பூங்குடியை சேர்ந்த சண்முகம் வயது 24 ஆகியோரை கைது செய்தனர். மேலும் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் தோப்பில் பதுங்கி இருந்த ராமனை நேற்று மதியம் போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய வீரமணி என்பவரை நேற்று கைது செய்தனர்.