கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்கள் ஒருவன் கைது
ராஜாக்கமங்கலத்தில் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.;
Update: 2024-04-01 15:11 GMT
ராஜாக்கமங்கலத்தில் கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இரணியல் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை அதே பகுதியை சேர்ந்த மாதவன் (31), ஆனந்த் (32) ஆகியோர் அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம். சம்பவ தினமும் இருவரும் மாணவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவியின் கையை பிடித்து இழுத்ததோடு கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டோடு தீ வைத்துக் கொளுத்தி விடுவதாக மாணவிக்கும், குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாதவன், ஆனந்த் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து மாதவனை போலீசார் இன்று கைது செய்தனர். ஆனந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.