இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் பலி

திண்டுக்கல் நத்தம் சாலை ரெட்டியபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.;

Update: 2024-06-04 12:48 GMT
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் பலி

திண்டுக்கல் நத்தம் சாலை ரெட்டியபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.


  • whatsapp icon

திண்டுக்கல் அடுத்த தவசிமடை ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் சவேரி ராஜ் மகன் நார்பட் சந்திரன் வயது 26. இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திண்டுக்கல் நத்தம் சாலை ரெட்டியபட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நார்பட் சந்திரன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News