திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு!

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் சைடு ஸ்டாண்டால் ஏற்ப்பட்ட விளைவால் ஒருவர் உயிரிழப்பு.

Update: 2024-03-02 09:32 GMT

உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சேஷாத்திரி வயது (60).  அவர் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளார். பொருட்களை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் உள்ள சைடு ஸ்டாண்ட் எடுக்க மறந்து இருசக்கர வாகனத்தை இயக்கிய பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News