பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி
தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-06-01 14:57 GMT
விபத்து
மதுரவாயல் மேற்கு முகப்பேர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் 58. நேற்று முன் தினம் வேலை விஷயமாக பஜாஜ் பிளாட்டினா பைக்கில் சென்றார். தாம்பரம் --- மதுரவாயல் பைபாஸ் வானகரம் அருகே சென்ற போது பைக் மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.