கம்பம் அருகே விபத்து ஒருவர் பலி
கம்பம் அருகே நடந்த வாகன விபத்தில், கண்ணன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.;
Update: 2024-05-10 15:26 GMT
கம்பம் அருகே நடந்த வாகன விபத்தில், கண்ணன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஆலமரத்துகுளம் கோழி பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கண்ணனை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து கம்பம் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் ஆசைக்கனி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்