கரிவலம் வந்தநல்லூர் அருகே விபத்தில் ஒருவர் பலி
விபத்தில் ஒருவர் பலி: போலீசார் விசாரணை;
Update: 2024-06-20 04:51 GMT
பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் சையது அலி (50). இவர் நேற்று மதியம் தனது மகளை கரிவலம் அடுத்த நல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குவளைக்கண்ணி அருகே சென்றபோது அங்கு சாலை ஓரத்தில் நின்றிருந்த நெல் அறுக்கும் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக மோதினார். இதற்கண்டா பகுதி பொதுமக்கள் பலத்த படுகாயமடைந்த சையது அலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம் வந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.