கம்பத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பலி
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் சாலையோர கம்பத்தில் மோதி உயிரிழந்தாா்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 05:14 GMT
கம்பத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த சித்தையன்கோட்டையைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் காா்த்திகேயன் (23). இவா், மதுரையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் துவரங்குறிச்சி - நத்தம் தேசியநெடுஞ்சாலை கிருஷ்ணாபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கம்பத்தில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் காா்த்திகேயன் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூராய்வுக்குப் பின் மாலையில் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.