மத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் பலி
மத்தூர் அருகே உரிய அனுமதி இன்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் பலி;
Update: 2024-02-27 17:38 GMT
மாடு முட்டியதில் பலி
மத்தூர் அருகே உரிய அனுமதி இன்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் பலி : உரிய அனுமதி இன்றி நடத்திய விழா குழுவினர் மீதூ நடவடிக்கை எடுத்து தமிழக அரசு இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் கிராமத்தில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு உரிய அனுமதியின்றி எருது விடும் விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. நடைபெற்ற இந்த விழாவில் எருது விடும் நிகழ்ச்சியை காண போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் கோவிந்தராஜ் கான சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வேகமாக ஓடி வந்த எருது கோவிந்தராஜ் மீது மோதியுள்ளது இதில் கோவிந்தராஜனின் மார்பு பகுதியில் மாடு முட்டியதில் அங்கேயே இரத்தவேலத்தில் படுகாயம் அடைந்து மயங்கியுள்ளார், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு பணியில் இருந்து மருத்துவர் அவரை பரிசோதித்ததில் கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தகவல் அளித்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிரங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மாடு முட்டிய விபத்தில் பலியான கோவிந்தராஜ் உயிர் இழப்பிற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மேலும் இந்த முறையற்ற எவ்வித பாதுகாப்பும் இன்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் நடைபெற்ற எருது விடும் விழாவை நடத்திய விழா குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் கூறி மத்தூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். இச்சம்பவம் மத்தூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.