பாவாலி கிராமத்தில் பட்டாசு மூலப் பொருட்கள் வெடித்து ஒருவர் காயம்

விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு மூலப் பொருட்கள் வெடித்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

Update: 2024-01-26 14:24 GMT
காவல் நிலையம் 

 விருதுநகர் அருகே பாவாலி பகுதியில் செல்வம் என்பவர் வீட்டின் பின்புறம் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராதமாக இந்த பட்டாசு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் சின்ன ராஜா என்ற கூலி தொழிலாளி காயம் அடைந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News