இணையவழியில் பொறியாளரிடம் ரூ. 6.80 லட்சம் மோசடி

தஞ்சாவூரில் இணையவழியில் பங்கு சந்தை வர்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.6.80 லட்சம் மோசடி செய்த மர்மநபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-08 06:59 GMT

பைல் படம்

தஞ்சாவூரில் இணையவழியில் பங்கு சந்தை வர்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.6.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த 39 வயது பொறியாளரின் பேஸ்புக் முகவரி, வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மார்ச் மாதத்தில் மர்ம நபர் அனுப்பிய தகவலில் இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதை நம்பிய பொறியாளர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 6.80 லட்சம் அனுப்பினார். ஆனால், எந்தவித லாபமும் கிடைக்காததால் மர்ம நபரை பொறியாளர் தொடர்பு கொள்ள முயன்றபோது, அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொறியாளர் தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News