கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-26 02:06 GMT

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

தமிழகத்தில் பரவலாக ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான வால்பாறை டவுன், ரொட்டிக்கடை, சோலையார் உள்ளிட்ட பல இடங்களில் மேலும் தொடர் மழை பெய்து வருவதால் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மற்றும் பழமையான மரங்கள் சாலையில் சாயும் நிலை உள்ளதாலும் வால்பாறை பகுதியில் உள்ள சுமார் 60.க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.. மேலும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்களோ சுற்றுலா பயணிகளோ செல்ல வேண்டாம் எனவும் மேலும் கூலாங்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் தண்ணீரில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News