ஊட்டி நகராட்சி சந்தை இரண்டாம் கட்ட பணிக்கு பூஜை

ஊட்டி நகராட்சி சந்தை புனரமைப்பு இரண்டாம் கட்டப் பணிக்கு இன்று பூஜை போடப்பட்டது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2024-03-01 16:25 GMT

மரக்கன்று வழங்கல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி சந்தையில் 1500 நிரந்தர கடைகள், 500 தற்காலிக கடைகள் 500 இயங்கிவருகின்றன. இந்த சந்தைக்கு தினமும் 3,500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

ஊட்டி நகராட்சி சந்தையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக முதல் கட்டமாக ரூ. 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடைகள் காலி செய்யப்பட்டு இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பழைய கடைகளை இடித்து புது கடைகள் கட்ட ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக காலி செய்யப்பட்ட கடைகளுக்கு பதிலாக ஏ.டி.சி., பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக கடைகளை இடிப்பதற்காக ஒரு சில நாட்களில் பூமி பூஜை போட உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு இடையே மாற்றுஏற்பாடு செய்யாமல் இரண்டாம் கட்ட கடைகளை காலி செய்ய சொல்லி வற்புறுத்துவதாக சந்தை வியாபாரிகள் நேற்று முன்தினம் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால்,

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அருணா ஊட்டி நகராட்சி சந்தையில் பணிகள் நடக்கும் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது வாகன நிறுத்துமிடம் கடைகள் எந்த வகையில் அமைய உள்ளது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் பணிகளை விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், இரண்டாம் கட்டப்பணிக்கு நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி பொறியாளர் சேகரன் தலைமையில் பூஜை போடப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "முதல் கட்டமாக 192 கடைகள் இடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 498 கடைகள் இடிக்கப்படும்.

இதன் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும் தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமும், மேல் தளத்தில் 293 கடைகள் கட்டப்படும். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 263 இருச்சக்கர வாகனங்களும், 126 இலகு ரக வானகங்களும் நிறுத்த முடியும். மேலும், ஏ.டி.எம்., கழிப்பிடம், தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த கட்டுமானப்பணி நிறைவடைந்ததும், மூன்றாம் கட்டப்பணிகள் தொடங்கும். கட்டுமானப் பணிகள் சுமார் ஓராண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றனர்.

Tags:    

Similar News