கொட்லுமாரம்பட்டியில் நவீன வசதிகள் கூடிய பேருந்து நிழற்கூடம் திறப்பு
கொட்லுமாரம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.;
கொட்லுமாரம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி - பென்னாகரம் ஒன்றியம், ஏரிக்கரை கொட்லுமாரம்பட்டி பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சபரிநாதன், ஒன்றிய அவைத்தலைவர் சரவணன், தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டி, மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு துறையைச் சார்ந்த அலுவலர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.