எடப்பாடியில் அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி அரசு மருத்துவமனை எதிரே அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு.

Update: 2024-04-09 17:03 GMT

கட்சி அலுவலகம் திறப்பு

சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் விக்னேஷ்க்கு எடப்பாடி நகரம் மற்றும் ஒன்றியத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள கூட்டணி கட்சி  வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை முதல் இரவு 10 மணி வரைக்கும் சேலம் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி அதிமுக வேட்பாளர் விக்னேஷுக்கு  எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பாடி நகரம் மற்றும் வடக்கு,தெற்கு ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி தாராபுரம், பக்க நாடு,சித்தூர்,பூலாம்பட்டி, நெடுங்குளம், சிலுவம்பாளையம்,வெள்ளாண்டி வலசு, வீரப்பம்பாளையம், வரையிலும் மேளதாளம் முழங்க பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பஸ் நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் சேலம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் விக்னேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், எடப்பாடி முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன், எடப்பாடி நகரக் கழகச் செயலாளர் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News