சேந்தமங்கலத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு !
சேந்தமங்கலத்தில் தேர்தல் அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.;
Update: 2024-03-25 04:41 GMT
தேர்தல் அலுவலகம் திறப்பு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில்திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் அசோக்குமார், கேபி.இராமசுவாமி, Ex. MLA.,பாலு (எ) பாலசுப்ரமணியம், செந்தில்முருகன், பேரூர் கழக செயலாளர்கள் தனபாலன், முருகேசன், பழனியாண்டி மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.