பெண்கள், குழந்தைகளுக்கான ‘மா காவேரி’ மருத்துவமனை திறப்பு

பெண்கள், குழந்தைகளுக்கான அதிநவீன ‘மா காவேரி’ மருத்துவமனை திருச்சியில் திறக்கப்பட்டது.

Update: 2024-06-17 08:21 GMT

மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் நேரு 

கன்டோன்மென்ட் அலெக்ஸாண்டிரியா சாலையில் உள்ள மா காவேரி மருத்துவமனையை தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்தாா். நிகழ்வுக்கு, காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனா் எஸ். சந்திரகுமாா், நிா்வாக இயக்குநா் எஸ். மணிவண்ணன், இணை இயக்குநரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டி. செங்குட்டுவன் ஆகியோா் தலைமை வகித்தனா்.இதில், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள 200 பிரத்யேக படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் குழந்தைகளுக்கான அனைத்து சிகிச்சை பிரிவுகளும், மகளிருக்கான அனைத்து சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. இங்கு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தை புற்றுநோயியல், குழந்தை இரைப்பை குடல், குழந்தை சிறுநீரகவியல், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைகளும், மகளிா் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறை, கா்ப்பகால பராமரிப்பு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மகளிா் அறுவைசிகிச்சை பிரிவு, கரு மருத்துவம், குழந்தையின்மை சிகிச்சை, உயா் சிறப்பு சிகிச்சைகள், புற்றுநோயியல் சிகிச்சைகளும், அதிநவீன மருத்துவ உபகரணங்களின் வசதிகளும் உள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உயா்சிகிச்சை பெற வேறு நகரங்களுக்குச் செல்லாமல் திருச்சியில் உள்ள ‘மா காவேரி’ மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சைகளை பெற முடியும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

Tags:    

Similar News