இரண்டு வருடங்கள் கழித்து மாரியம்மன் கோவில் திறப்பு

கோட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்கள் கழித்து மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-31 11:05 GMT


கோட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்கள் கழித்து மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டுள்ளது.


மல்லசமுத்திரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் கிராமத்தில், கடந்த இரண்டு வருடங்களாக மாரியம்மன் கோவில் பூசாரி நியமிப்பது குறித்து இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவிவந்தது. இந்நிலையில், கடந்த 5ம்தேதி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில் நடந்த ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து நேற்று, இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் மணிகண்டன், ஆர்.ஐ.,பிரபாவதி, வி.ஏ.ஓ.,ராஜ்குமார் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது.

இதில், பூசாரியாக மங்களம் பகுதியை சேர்ந்த சபரீசன் என்பவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மொஞ்சனூரை சேர்ந்த ராஜா சிவாச்சாரியார் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது. கோயிலுக்கு பாத்தியப்பட்ட 110குடும்பங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தினசரி காலை 7 மணிமுதல் 8 மணிவரையில் பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது

Tags:    

Similar News