நவீன எரிவாயு தகனமேடை திறப்பு
சங்ககிரியில் 3.கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை திறப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-16 18:26 GMT
சங்ககிரியில் 3.கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை திறப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நன்கொடையாளர்கள் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்த அமைச்சர் கே.என்.நேரு நன்கொடை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தும், சங்ககிரி பேரூராட்சி விரைவில் நகராட்சியாக தரம் உயர்த்த முயற்சிப்பதாகவும் பேசினார். சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முருகு சந்திரா அறக்கட்டளை, சுவலெக்ட் எனர்ஜி சிஸ்டம் லிமிடெட், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இதனை சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது இங்குள்ள லட்சுமி தீர்த்த குலத்தை தூர்வார வேண்டுமென முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வைத்த கோரிக்கையை ஏற்று அதனை அரசு சார்பில் நிறைவேற்றி தர போவதாகவும், சங்ககிரி பேரூராட்சி நகராட்சியாக மாற்ற முயற்சித்து வருவதாகவும், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையை தார் சாலையாக மாற்றிதந்துள்ளதாகவும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தரவுள்ளதாகவும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி முருகன் உட்பட திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.